உதவிய நண்பர்களுக்கு நன்றி !
எனது பிரமிக்க வைக்கும் கௌசல்யா பதிவை படித்ததன் தொடர்ச்சியாக சில வலைப்பதிவு நண்பர்கள் தங்களால் ஆன பண உதவி செய்ய முன் வந்துள்ளனர். உங்களில் பலர் இந்த எனது பதிவை தவற விட்டிருக்கலாம். அதனாலேயே, இந்த வேண்டுகோளை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன். ஒரு கணிசமான தொகை திரட்டியவுடன், அதை சென்னையில் உள்ள ஒரு பிரபல வலைப்பதிவர் ஒருவர் மூலம் கௌசல்யாவிடம் (அவருக்கு பயன் தரும் வகையில்) சேர்ப்பித்து விட ஆவன செய்கிறேன்.
இது வரை, பணம் அனுப்பிய திருமதி ஜெயஸ்ரீ(USA), திருமதி ரம்யா நாகேஷ்வரன், குழலி, திரு.டோண்டு ராகவன், எஸ்.சங்கர்(தில்லி), திருமலை ஆகியோருக்கு என் நன்றிகள். இதில் ஒத்துழைப்பு தரும் ராம்கி அவர்களுக்கும் நன்றி.
என்றென்றும் அன்புடன்
பாலா
5 மறுமொழிகள்:
என்னங்க பாலா,
//துளசி அக்கா,
அயல்நாட்டிலிருப்பவரிடம் பண உதவி பெறுவது குறித்து இன்னும் முழுமையாக யோசிக்கவில்லை. ராம்கியிடமும், இது குறித்து
பேசி விட்டு விவரங்கள் தருகிறேன். நன்றி.
எ.அ.பாலா//
இப்படிச் சொன்னீங்க. இப்பப் பார்த்தா சிலர் வெளிநாட்டுலே இருந்து அனுப்பியிருக்காங்க?
உடனே விவரம் சொல்லுங்களேன். படிக்கற புள்ளைக்கு உதவுனா புண்ணியம் கூடும்.
என்றும் அன்புடன்,
துளசி.
துளசி அக்கா,
//இப்படிச் சொன்னீங்க. இப்பப் பார்த்தா சிலர் வெளிநாட்டுலே இருந்து அனுப்பியிருக்காங்க?
உடனே விவரம் சொல்லுங்களேன். படிக்கற புள்ளைக்கு உதவுனா புண்ணியம் கூடும்.
//
என் கௌசல்யா பற்றிய முந்தைய பதிவில், ஒரு பின்னூட்டத்தில் விவரம் தந்திருக்கிறேனே !!!! அதன் மூலம் தான் ஜெயஸ்ரீ அவர்கள் பணம் அனுப்பினார்கள்.
அவ்விவரம் மீண்டும் கீழே ! நன்றி.
*******************************************************
அனைத்து நண்பர்களுக்கும்:
பண உதவி செய்ய விரும்புவர்கள் கீழ்க்கண்ட (ராம்கியின்) வங்கிக் கணக்குக்கு அனுப்பவும்.
***********************************
J. RAMAKRISHNAN
A/C No. 608801500701
ICICI Bank
**********************************
டெபாசிட் செய்தவுடன் மறக்காமல் விபரங்களை (பெயர், தொகை, தேதி ..) தயவு செய்து கீழ்க்கண்ட மின்னஞ்சல்களுக்கு
தெரிவிக்கவும்
balaji_ammu@yahoo.com
ramki@rajinifans.com
**********************************
எ.அ.பாலா
??/
வெளிநாட்டிலிருந்து காசோலையாக அனுப்புபவர்கள் எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்பதையும் தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி.
அனானிமஸ்,
balaji_ammu@yahoo.com-க்கு உங்கள் மின்னஞ்சலை எழுதுங்கள். அனுப்பு வேண்டிய முகவரியைத் தருகிறேன். உதவ முன் வந்ததற்கு என் நன்றிகள்.
என்றென்றும் அன்புடன்,
பாலா
Post a Comment